_ _    _ _____  ___   __                       
 __      _(_) | _(_)___ / ( _ ) / /_   ___ ___  _ __ ___  
 \ \ /\ / / | |/ / | |_ \ / _ \| '_ \ / __/ _ \| '_ ` _ \ 
  \ V  V /| |   <| |___) | (_) | (_) | (_| (_) | | | | | |
   \_/\_/ |_|_|\_\_|____/ \___/ \___(_)___\___/|_| |_| |_|

கூலிப்படை

நடுக்காலம் மற்றும் மறுமலர்ச்சிக் காலங்களில் இத்தாலியக் கூலிப்படையின் தலைவன் (லியொனார்டோ டா வின்சியின் ஓவியம், 1480.

கூலிப்படை (mercenary) என்பது பணத்துக்கு போர் புரியும் ஒரு படை ஆகும். பொதுவாக கூலிப்படைக்கு அவர்கள் சண்டை போடும் எதிரிக்கு எதிராக தனிப்பட்ட பகையை கொண்டிருப்பதில்லை. இவர்கள் பொதுவாக சட்டத்திற்குப் புறம்பான வன்முறைச் செயல்களைச் செய்வர். செய்யும் குற்றத்தின் தீவிரத்தைப் பொறுத்து கூலியாகப் பணத்தை பெறுகின்றனர். இவர்கள் கும்பலாக குற்றச் செயல்களைச் செய்பவர்கள். இவர்கள் பெரும்பாலும் அரசியலைச் சார்ந்தவர்களுடன் மறைமுகத் தொடர்பு கொண்டிருப்பர்.

இலங்கையில் இலங்கை இராணுவம் கூலிப்படைகளை ஈழப்போரில் பயன்படுத்தியது.[சான்று தேவை] இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் 2016 ஆம் ஆண்டு காலகட்டத்தில் தென் மாவட்டங்களான திருநெல்வேலி, மதுரை போன்ற மாவட்டங்களில் இவர்களின் ஆதிக்கம் அதிகமாகியுள்ளது.

திருவிளையாடற் புராணத்தில் 30ஆவது படலமான “மெய்காட்டிய படலம்” பாடல்களில் குலபூடணபாண்டியனின் ஆட்சியில்

“கொங்கர் குரு நாடர் கங்கர் கருநாடர் அங்கர் ஆரியர்கள் வங்கர் மாளவர்கள் குலிங்கர் கொங்கணர்கள் தெலுங்கர் சிங்களர்கள் கலிங்கர் கவுடத்தர் முதலான அண்டை நாட்டினரும், மேலும், காஞ்சி நாகரிகம் (சோழர் நாகரிகம்) உடையவர்களான கொல்லர் கூர்ச்சர்கள் பல்லவர் பப்பரர்கள் வில்லர் விதேகர் கடாரர் கேகயர்கள் மராடர் முதலான பல்வேறு அண்டைநாட்டினர் கூலிப்படையாகப் பணியாற்றினர் என்ற குறிப்பு உள்ளது.


மேற்கோள்கள்

  1. தென் மாவட்டங்களில் கூலிப்படை ஆதிக்கம் அதிகரிப்பு: உ.வாசுகி திடுக்கிடும் தகவல் தி இந்து தமிழ் 21 மார்ச் 2016
  2. "திருவிளையாடற் புராணம் - மாயப் பசுவை வதைத்த படலம் முதல் உலவாக்கோட்டை அருளிய படலம் வரை". shaivam.org. பார்க்கப்பட்ட நாள் 2019-07-23.