_ _    _ _____  ___   __                       
 __      _(_) | _(_)___ / ( _ ) / /_   ___ ___  _ __ ___  
 \ \ /\ / / | |/ / | |_ \ / _ \| '_ \ / __/ _ \| '_ ` _ \ 
  \ V  V /| |   <| |___) | (_) | (_) | (_| (_) | | | | | |
   \_/\_/ |_|_|\_\_|____/ \___/ \___(_)___\___/|_| |_| |_|

அலைக்குறி

அலைக்குறி ( ~ ) (ஆங்கிலம்:tilde) என்பது பல மொழிகளில் பயன்பாட்டில் உள்ள அழுத்தற் குறியீடுகளில் ஒன்று. பெரும்பாலும் எசுப்பானியத்திலும் போர்த்துக்கேய மொழியிலும் பயன்படுத்தப்படுகிறது.

பயன்பாடு

எசுப்பானியத்தில், அலைக்குறி, N எழுத்துருவின் மீது இடப்பட்டால் ( Ñ ), அதனை போலன்றி போல உச்சரிக்க வேண்டும்.

போர்த்துக்கேயத்தில் "a" (ã) மற்றும் "o" (õ) உயிரெழுத்து ஒலிகளை மூக்கின் மூலமாக வெளியிட குறிக்கும் குறியாகப் பயன்படுத்தப்படுகிறது.

யுனிக்சு இயக்குதளத்தில், அலைக்குறி பயனரின் "தாயக" தரவுத் தொகுப்பைக் குறிக்கிறது.

மேலும் ஏதாவது மதிப்பீடு ஏறத்தாழ உள்ளது என்று பொருள்பட அலைக்குறிப் பயனாகிறது. காட்டாக ~24 என்பது ஏறத்தாழ 24, சுமார் 24 எனப் பொருள்படும்.